ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 14, 2020

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை

ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.



ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.



அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.இது குறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் அவர்களது பதவி பறிக்கப்படும். இவ்வாறு ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment