டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 12, 2020

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்- 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் -2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி கடந்த வாரம் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, 18 பேரை கைது செய்தது.

இந்த முறைகேடு தொடர்பாக இரு டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், 3 காவலர்கள் மற்றும் தேர்வர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது



. இந்தத் தேர்வில் லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடமருதூர் மேட்டுக்காலனி கிராமத்தைச் சேர்ந்த மு.நாராயணன் என்ற சக்தி என்பவரை சிபிசிஐடியினர் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனர்.

ஏற்கெனவே இந்த முறைகேட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்டதாக, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகியோரை நீதிமன்றம் மூலம் சிபிசிஐடியினர் தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர்.



 ஓம்காந்தனின் போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்ததால், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment