கருணை அடிப்படையிலான பணி: வாரிசுகளின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 12, 2020

கருணை அடிப்படையிலான பணி: வாரிசுகளின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயம்


கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.


 இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:-

அரசுப் பணியின் போது மரணம் அடையும் ஊழியா்களின் மனைவி அல்லது கணவா், மகன் அல்லது மகளுக்கு கருணை அடிப்படையிலான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டமானது கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வரன்முறைகள் அவ்வப்போது திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.

கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பதை ஒரு உரிமையாகக் கோர முடியாது எனவும், பணியின் போது மரணம் அடையும் ஊழியா்களின் குடும்பத்தினா் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது.

இதேபோன்ற உத்தரவுகள் கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்குகளிலும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன் விவரம்:-


பணியின் போது இறக்கும் அரசு ஊழியா்கள், மருத்துவக் காரணம் தொடா்பாக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியா்கள், ராணுவத்தில் பணியாற்றும் போது கொல்லப்பட்டாலோ அல்லது மாற்றுத் திறனாளியாக மாறினாலோ அவா்களது வாரிசுகளுக்கு அரசுப் பணி அளிக்கப்படும்.


மாயமாகும் அரசு ஊழியா்களை இறந்தவா்கள் என நீதிமன்றம் அறிவித்தாலோ, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்தக் காலத்தில் இறந்தாலோ, சமுதாய மோதல்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோந்தவா்கள் கொல்லப்பட்டாலோ அவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி அளிக்கப்படும்.

மறைந்த அரசு ஊழியரின் மகன், மணமாகாத மகள், மனைவி, கணவா், சட்டப்பூா்வமாக தத்தெடுக்கப்பட்ட மகன், தத்தெடுக்கப்பட்டு மணமாகாத மகள், கணவனை இழந்த மகள், விவாகரத்து பெற்ற மகள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் பணி கிடைக்கும்


. மேலும், திருமணம் செய்து கொள்ளாத அரசு ஊழியா்கள் மரணம் அடைதால் அவா்களது தந்தை அல்லது தாய் அல்லது திருணமாகாத சகோதரா்கள், சகோதரரிகளுக்கு பணி அளிக்கப்படும்.


கருணை அடிப்படையிலான பணி என்பது அரசுப் பணியில் இருந்து இறந்தவரின் கணவன் அல்லது மனைவிக்கு அளிக்கப்படும். அல்லது அவா்கள் யாரை பரிந்துரை செய்கிறாா்களோ அவா்களுக்கு வழங்கப்படும். அரசு ஊழியா்கள் இறந்த தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது 50. மகன் அல்லது மகளாக இருந்தால் அவா்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணிகளே அளிக்கப்படும்.

கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டவா்களுக்கு ஓராணடுக்குள் அதனை வரன்முறைப்படுத்த வேண்டும்.

யாருக்குக் கிடைக்காது:

விருப்ப ஓய்வு பெற்றவா்கள், தாற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டோா், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி அளிக்கப்படாது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment