5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 2, 2020

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு குறித்து பயப்படவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் தமிழக பள்ளி கல்வி துறையுடன் இணைந்து பசுமை பள்ளி என்னும் சுற்றுச்சூழல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.



இதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சேலையூர் ராஜ கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு விருதுகளையும், மாணவர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்.


 இதில் முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ‘சுற்றுச்சூழல் மேம்பாட்டில் தனது பங்கு’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டியும் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-


பயப்பட வேண்டாம்

5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்து பயப்பட வேண்டாம். தேர்வு எழுதும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்.


அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்து உள்ளார். மாணவர்களின் கல்விதிறன் மற்றும் பள்ளிகள் எப்படி நடைபெறுகிறது? என தெரிந்துகொள்ளவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு நடைபெறும்.



தேர்வின்போது வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வருவார்கள். இதில் தவறான தகவல்கள் பரப்பபடுகிறது. மாணவர்களும், பெற்றோர்களும் பயப்பட வேண்டாம். மாணவர்களின் திறனை இந்த தேர்வுகள் மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment