BE கல்விக் கட்டணம் 50% உயர்கிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 10, 2020

BE கல்விக் கட்டணம் 50% உயர்கிறது

பொறியியல் படிப்பிற்கான அகில இந்திய கவுன்சில் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. பேராசிரியர்களுக்கே குறைந்த பட்சமாக மாதம்ரூ30000 ஊதியம் வழங்க வேண்டி இருக்கிறது


. 6வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் மேலும் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். இதனால் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை என கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்து வருகின்றன.


தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிக்கான கல்விக்கட்டணங்கள் அனைத்தும் மாநில கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது


.நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழுவின் பரிந்துரைப் படி பொறியியல் கல்லூரிகளின் அதிகபட்ச ஆண்டு கட்டணம் ரூ 1.44 லட்சம் முதல் 1.58 லட்சம் வரை இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ 55 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


 இதுவே தனியார் கல்லூரிகளில் ரூ 90 ஆயிரம் 2021-ம் ஆண்டு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஏற்றப்பட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றன.இதனால் கல்விக்கட்டணம் 50 சதவீதம் வரை உயரும் அபாயம் உள்ளது

Source:News TM website

No comments:

Post a Comment