தனியார் பள்ளிகள் ஏப்ரலில் தான் மாணவர் சேர்க்கை: மீறினால் கடும் நடவடிக்கை...பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, February 11, 2020

தனியார் பள்ளிகள் ஏப்ரலில் தான் மாணவர் சேர்க்கை: மீறினால் கடும் நடவடிக்கை...பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏப்ரலில் தான் நடத்த வேண்டும். அதற்கு முன்னதாக நடத்தினால் கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உடல் நலத்தை பேணுதல்  தொடர்பாக ஒருநாள் கருத்தரங்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த நிகழ்வில், உடல் நலம் தொடர்பான  குறுந்தகடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு பேசியதாவது:


தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு  நன்கொடை  வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை என்பது ஏப்ரல் மாதத்தில்தான் நடத்த வேண்டும்.


 அதற்கு முன்னதாக விளம்பரத் த  ட்டிகள் வைத்து மாணவர்கள் சேர்க்கை நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் டியூஷன் மையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



  முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே டியூஷன் சென்டர்கள் நடத்த வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள மாணவர்கள் இடைநிற்றல் குறித்த புள்ளி  விவரங்களை, தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்


. புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பாடங்களை மாணவர்கள்  எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சி கையேடுதயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

அமைச்சர் செங்கோட்டையன் டுவிட்:


கூடுதல்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து இதற்கென நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.மாசிலாமணி அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறுகள் குறித்து வாய்மொழியாக அல்லாமல் எழுத்துப்பூர்வமாக வழங்கினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment