கோடை காலங்களில் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம்?: பொதுமக்களுக்கு மருத்துவர் ஆலோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, February 18, 2020

கோடை காலங்களில் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம்?: பொதுமக்களுக்கு மருத்துவர் ஆலோசனை

தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினரும் கிராமியம் நிறுவன இயக்குனருமான டாக்டர் நாராயணன் கோடைகாலங்களில் உணவு பாதுகாப்பு குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை காலங்களில் உடலுக்கு அதிகமாக தேவைப்படுவது நீர்சத்து. உணவு மூலம் பரவக்கூடிய கிருமிகள் ரசாயன சுவை மற்றும் நிறம் கூட்டங்களால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள சில விழிப்புணர்வு அறிவுரைகள்:உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பதிவுச் சான்றிதழ் உள்ளதா என பயன்படுத்திக்கொள்ளவும்.


 ஐஸ் கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் தவிர்க்கவும். கடையும், கடை இருக்கும் பகுதியும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும், குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும். விற்பனையாளர் பழச்சாறு தயாரிப்பின்போது சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். குளிர்பானம் பழச்சாறு செய்ய பயன்படுத்தும் பழம், பால், தயிர் போன்ற மூலப் பொருட்கள் தரமானதாக உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.



கூல் மோர் பால் தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்க வேண்டும். பழச்சாறு குளிர்பானங்களில் பயன்படும் ஐஸ் கட்டிகள் நல்ல தண்ணீரில் செய்ததா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்


. பழச்சாறு குளிர்பானங்களில் பயன்படுத்தும் சுவை கூட்டி எஸ்என்ஸ் மற்றும் கலரிங் ஏஜென்ஸ் ஆகியவற்றில் காலாவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் முகவரியை சரிபார்க்கவும். பழச்சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி ஜூஸர், வடிகட்டி போன்றவை துருப்பிடிக்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.


பொதுமக்கள் கோடை காலங்களில் தவிர்க்க வேண்டியவை: பழச்சாறு, ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவற்றை தவிர்க்கவும். சர்பத் குளிர்பானங்களில் நீலம் ஊதா அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் தவிர்க்கவும். அதிகமான நேரங்கள் ரசாயன சுவை கூட்டி கலந்த சர்பத் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்



. ஐஸ் கட்டிகளை வைக்கோல் போன்றவற்றை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருக்க கூடாது. குளிர்பானங்கள், பழச்சாறுகள் நேரடியாக குளிர் பெட்டியில் இருந்தது பெறுவது, நல்லது குளிர்பானங்கள் பழச்சாறு நறுக்கிய பழங்கள் போன்றவற்றை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளில் அவர்களிலும் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment