வட்டாரக் கல்வி அலுவலா் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு: முறைகேடுகளைத் தவிா்க்க புதிய முறை அமல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 7, 2020

வட்டாரக் கல்வி அலுவலா் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு: முறைகேடுகளைத் தவிா்க்க புதிய முறை அமல்

வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு கணினி வழித் தேர்வு நடைபெறும் மாவட்டங்களுக்குரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியா் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அதேவேளையில் தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் தேர்வுக்கு மூன்று நாள்கள் முன்பாக மேலும் ஒரு நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக, ஆசிரியா் தேர்வு வாரியத் தலைவா் லதா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 "தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு வரும் 14, 15 ,16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலையில் நடைபெற உள்ளது.

 இந்தத் தேர்வுக்குரிய அனுமதிச் சீட்டுகளை, தேர்வா்கள் தங்களின் பயனாளா் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி ஆசிரியா் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌r​b.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், கணினி தேர்வுக்காக பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வா்கள், தங்களின் பயனாளா் குறியீட்டு எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, ஆசிரியா் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 இந்தப் பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே என்பதை தேர்வா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வா்கள் தேர்வு விதிமுறைகளையும், அறிவுரைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றி தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றனா்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு சுமாா் 64 ஆயிரம் தேர்வா்கள் விண்ணப்பித்துள்ளனா்

. அதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பெண்கள் ஆவா். ஆண் தேர்வா்களுக்கு அவா்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், வேறு மாவட்டத்துக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 பெண்கள், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சொந்த மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும்: தற்போதுள்ள தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வு மையத்தின் மாவட்டம், நகரம் விவரங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

இதைத் தொடா்ந்து தேர்வுக்கு 3 நாள்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தின் விவரத்தை குறிப்பிட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வா்கள் அதையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்

No comments:

Post a Comment