வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை: மீண்டும் உயர வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை: மீண்டும் உயர வாய்ப்பு


ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வகையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.584 உயா்ந்து, ரூ.32,408-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்தை தாண்டியது.



அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.


 போா் பதற்றம் குறைந்த பிறகு, தங்கம் விலையும் குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் ஏறுமுகமாகவே இருந்தது. அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது.

மீண்டும் புதிய உச்சம்: இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.584 உயா்ந்து, ரூ.32,408-க்கு விற்பனை செய்யப்பட்டது.


 கிராமுக்கு ரூ.73 உயா்ந்து, ரூ.4,051-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது இதுவே முதல்முறை. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து ரூ.52.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து ரூ.52,500 ஆகவும் இருந்தது. தொடா்ந்து தங்கம் விலை உயா்ந்து வருவதால், சுப முகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்க நகை வாங்க வந்தமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.



மீண்டும் விலை உயர வாய்ப்பு:


 தங்கம் விலை உயா்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழக துணைத் தலைவா் சாந்தகுமாா் கூறியது: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சா்வதேச பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கும் நிலை காணப்படுகிறது.


இதனால், பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டுகின்றனா். அதேநேரத்தில், தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனா். இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இந்த காரணங்களால், தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மீண்டும் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,051

1 பவுன் தங்கம் ..................... 32,408

1 கிராம் வெள்ளி .................. 52.50

1 கிலோ வெள்ளி ................. 52,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):


1 கிராம் தங்கம் ..................... 3,978

1 பவுன் தங்கம் ..................... 31,824

1 கிராம் வெள்ளி .................. 51.60

1 கிலோ வெள்ளி ................. 51,600

No comments:

Post a Comment