தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் தொடர்பாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களுக்கும், மத்திய அரசிடம் தமிழக அரசு வழங்கிய புள்ளி விவரங்களுக்கும் முரண்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்
.2015 -16 கல்வியாண்டில் 8 சதவீதமாக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 2017 -18-ல் 16.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த புள்ளி விவரங்களின்படி மாணவர்களின் இடைநிற்றல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மறுபுறம், மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்த புள்ளி விவரங்களின்படி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. எனவே தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களுக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்த புள்ளி விவரங்களுக்கும் வேறுபாடு உள்ளது.
சட்டப்பேரவை புள்ளிவிவரங்களின்படி 2015-2016-ல் தமிழகத்தில் 9, 10 வகுப்புகளில் மாணவர் இடைநிற்றல் 3.76 சதவிகிதம் ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நாடளுமன்ற புள்ளிவிவரத்தில் அது 8.10 சதவிகிதம் ஆக உள்ளது.இதுபோல் 2016-2017ம் ஆண்டில் சட்டப்பேரவை ஆவணத்தில் இடைநிற்றல் 3.75 சதவீதமாகவும், மத்திய அரசின் புள்ளி விவரத்தில் அது 10 சதவிகிதமாகவும் மாறுபட்டு உள்ளது.
2017-2018-ம் ஆண்டில் சட்டப் பேரவை தாக்கல் செய்யப்பட்ட இடைநிற்றல் விவரம் 3.61 சதவிகிதமாகவும், மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் 16.2 சதவீதமாகவும் இருந்தது. இவ்வாறாக கடந்த மூன்று ஆண்டுகளில் 9 மற்றும் 10 வகுப்புகளில் மாணவர்களின் இடைநிற்றல் தமிழகத்தில் அதிகரித்திருப்பதை மத்திய அரசின் புள்ளி விவரம் தெளிவாக காட்டுகிறது.
மாறாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த புள்ளி விவரங்கள் வேறுபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்கிய புள்ளி விவரங்கள் சட்டப்பேரவை புள்ளி விவரத்துடன் மாறுபட்டிருப்பது குறித்து அரசு உரிய விளக்கத்தை தர வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்
Source:News18 tamil

No comments:
Post a Comment