விண்ணிற்கு செல்கிறது மாணவியரின் செயற்கைக்கோள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 20, 2020

விண்ணிற்கு செல்கிறது மாணவியரின் செயற்கைக்கோள்

அறந்தாங்கி தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்த செயற்கைகோள், 4ம் தேதி, விண்ணிற்கு செலுத்தப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள, எஸ்.எப்.டி., என்ற தனியார் பள்ளியில், சுபானா, 17, கீர்த்தனா, 17, என்ற மாணவியர், ப்ளஸ் 2 படித்து வருகின்றனர். 



இவர்கள், எஸ்.எப்.டி, - எஸ்.ஏ.டி., ரகத்தைச் சேர்ந்த, சிறிய ரக செயற்கைகோளை கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து நேற்று, மாணவியர் கூறியதாவது:இந்த செயற்கைக்கோள் மூலம், பருவநிலை மாற்றங்களை கண்டறிய முடியும்


. மேலும், வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், காற்றின் ஈரப்பதம், நச்சுத்தன்மை ஆகியவற்றை அளவிட முடியும். அதன் மூலம், விவசாயத்திற்கு தேவையான பயன்களை பெறலாம்.முதல்கட்டமாக, அறந்தாங்கி பகுதியில் உள்ள, சில விவசாய நிலங்களை, 'ட்ரோன்' மூலம் ஆராய்ந்து, சோதித்து பார்த்துள்ளோம்.



இந்த செயற்கை கோளை செய்ய, ஆறு மாத காலம் ஆனது. மிகக்குறைந்த செலவில் தான், இது உருவாக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான, மெக்சிகோவில் உள்ள, 'ஏர்பேஸ்லா ஹீலியம் கேப்சூல்' மூலம், இந்த செயற்கைக்கோள், மார்ச், 4ம் தேதி, விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment