பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இலவச ஆலோசனை கையேடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 17, 2020

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இலவச ஆலோசனை கையேடு

வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கிறது

.இதை முன்னிட்டு, விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் கோவை ஆதித்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் தேர்வு ஆலோசனை கையேடு தயார் செய்யப்பட்டுள்ளது.


இதில் பொதுத்தேர்வுக்கு மாணவ-, மாணவியர் எவ்வாறு தயாராவது, தேர்வு அறையில் எப்படி நடந்து கொள்வது, தேர்வு காலங்களில் பெற்றோர், குழந்தைகளை எப்படி கவனிப்பது, தன்னம்பிக்கை மற்றும் உயர்கல்வி ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கையேடு, புளியம்பட்டி கே.வி.கே., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெம்பண்ணா ஒதிமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பனையம்பள்ளி, தொட்டம்பாளையம், பவானிசாகர், பெத்திகுட்டை, எஸ்.புங்கம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளிகள், எஸ்.ஆர்.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,


அம்மா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தபோவனம் மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அன்னூர், சிறுமுகை பகுதியில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவருக்கு வழங்கப்பட்டது


.இந்த கையேட்டினை, மாணவ, மாணவியர் நல்ல முறையில் படித்து பயன்பெற வேண்டும்.பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment