வாக்குச் சாவடிக்கு போகாமல் ஓட்டு போட இ-ஓட்டு வசதி: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 16, 2020

வாக்குச் சாவடிக்கு போகாமல் ஓட்டு போட இ-ஓட்டு வசதி:

வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே  இ-ஓட்டு போடும் புதிய தொழில்நுட்பம் குறித்து சென்னை ஐஐடி-யுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.. தொலை தூர இடங்களில் இருந்தும் ஓட்டளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி.யுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.



இதற்கான ஆராய்ச்சி திட்டங்கள் சென்னை ஐஐடி-யில் நடந்து  கொண்டிருக்கிறது. இது குறித்து தேர்தல் துணை ஆணையர் சந்தீப் சக்‌ஷேனா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இது வீட்டிலிருந்து சொந்த கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நினைத்த நேரத்தில் ஓட்டு போடும் முறையல்ல.


சென்னை வாக்காளர் டெல்லியில்  இருக்கிறார் என்றால், இ-ஓட்டு போடுவதற்கு அவர் தேர்தல் அதிகாரியிடம்  முன்கூட்டிய  விண்ணப்பிக்க வேண்டும். அவர் வாக்களிக்க டெல்லியில் உள்ள  தேர்தல் ஆணையம் அமைக்கும் இடத்தில் அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து,  இந்த இ-ஓட்டு வசதியை பயன்படுத்தலாம்.

பிரத்யோக இன்டர்நெட் லைனில்,  பயோ-மெட்ரிக் கருவிகள் மற்றும் வெப் கேமிரா உட்பட பல கருவிகளுடன்  அமைக்கப்பட்ட மையத்திலிருந்து இந்த எலக்ட்ரானிக் ஒட்டுக்களை போடலாம். வாக்காளர் அடையாள அட்டை  சரிபார்க்கப்பட்டு,  அதன் பிறது எலக்ட்ரானிக் வாக்குச்சீட்டு  உருவாக்கப்படும்



 (ஸ்மார்ட் கான்ட்ராக்ட்).  வாக்காளர் எலக்ட்ரானிக் வாக்குச் சீட்டில், ஓட்டு பதிவு  செய்தவுடன், அது பாதுகாப்பாக எலக்ட்ரானிக் முறையில் மறைக்கப்பட்டு பிளாக்  செயின் ஹேஸ்டாக்  உருவாக்கப்படும்.
இந்த ஹேஸ்டாக் அறிவிப்புகள்,  வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்படும்.


இந்த இ-ஓட்டுக்கள்  ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக மதிப்பீடு செய்ப்படும்.  இந்த இ-ஓட்டு முறைக்காக ‘பிளாக் செயின்’  என்ற தொழில்நுட்பம்  பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் தற்போது ஆய்வு நிலையில் உள்ளது.

இந்த தொழில்நுட்பம் ஒத்துக் கொள்ளப்பட்டால், இது குறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை செய்யப்பட்டு, தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள்  கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment