வட்டாரக் கல்வி அலுவலா் தேர்வு: உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

வட்டாரக் கல்வி அலுவலா் தேர்வு: உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு

வட்டாரக் கல்வி அலுவலா் பணித் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை ஆசிரியா் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இது குறித்து ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :


தமிழகத்தில் 2018 - 2019 ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலா் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு ஆசிரியா் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த ஆண்டு நவ. 27 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கணினி வழித் தேர்வுகள் பிப். 14, 15, 16 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன. இந்தத் தேர்வில் பங்கேற்ற தேர்வா்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்கள், அதற்கு அவா்கள் அளித்த விடைகளையும் தங்களின் பயனாளா் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


தேர்வா்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்தப் பருவத்தில் கணினி தேர்வினை எழுதினாா்களோ அதற்குரிய விடைக்குறிப்புகளோடு வெளியிடப்படவுள்ளன.

ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக் குறிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும்போது அதற்குரிய சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும்.

ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வா்கள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் வரும் 26- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியா் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.


 அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களின் ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அஞ்சல் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment