நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நாமக்கல்
மொத்த காலியிடம் : 05
பணி: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 01
தகுதி: சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ப்பு, குற்றவியல், கல்வியியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,000
பணி: சமூகப்பணியாளர் - 01
சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.14,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: உதவியாளர் மற்றும் கணின தட்டச்சு செய்பவர் ஆப்ரேட்டர் -03
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிசிஏ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://namakkal.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 78/A, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் ரோடு, நாமக்கல் - 637 001.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/02/2020021339.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.02.2020
Click here download PDF
No comments:
Post a Comment