ரயில் நிலையங்களில் வழங்கி வந்த இலவச வை-ஃபை சேவை இனி இல்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 19, 2020

ரயில் நிலையங்களில் வழங்கி வந்த இலவச வை-ஃபை சேவை இனி இல்லை

கூகுள் ஸ்டேஷனை இந்தியாவில் தொடங்கி கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக உலகளவில் இந்த திட்டத்தை மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.


கூகுள் ஸ்டேஷன் என்ற திட்டம் இந்திய ரயில்வே மற்றும் ரயில் டெல் நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சியாக இந்தியாவில் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவச வை ஃபை வழங்கும் சேவை கடந்த 2015ம் ஆண்டே தொடங்கப்பட்டது


. இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள பரபரப்பான 400க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் விரைவான இலவச பொது வை-ஃபை கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் இலவச வை-ஃபை வழங்குவதற்கான இந்த முயற்சிகளை கூகுள் ஸ்டேஷன் அறிவித்த 1 வருடம் கழித்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இலவச ஜியோ சேவையை அறிமுகப்படுத்தியது.


வாடிக்கையாளர்களுக்கு கட்டணமின்றி 4ஜி வேகத்தில் இணைய சேவைகளை வழங்கியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். இது மற்ற தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்கள் தங்கள் கட்டணங்களை குறைக்கும் அளவிற்கு இணையசேவை சந்தையையே புரட்டிப்போட்டது.


அதுவரை இணைய சேவைகளுக்காக ஆயிரக்கணக்கில் செலவிட்டு வந்தவர்கள் வெறும் சில நூறு ரூபாய்களை மட்டுமே செலவிட வேண்டிய அளவிற்கு கட்டணங்கள் குறைந்தன. மக்களுக்கு அதிவேக இணையசேவையை வழங்குவதற்காக அரசு பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவதால் தற்போது இணைய பயன்பாடு எளிதானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாறிப்போயிருக்கிறது.


 இதன் காரணமாக கூகுள் ஸ்டேஷனின் பயன்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இணையசேவை மக்களை சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கூகுள் ஸ்டேஷனின் இந்த திட்டம் தற்போது வெற்றி அடைந்திருப்பதால் நடப்பு ஆண்டிலிருந்து ரயில் நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வை-ஃபை சேவையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ள கூகுள் ஸ்டேஷன் நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.


உலகளவில் இணைய சேவைகளை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு பிரதான இடம் இருப்பதால் இந்தியா மீதான கூகுளின் கவனம் ஒருபோதும் விலகாது என்றும், வேறு புதிய சேவைகளை எவ்வாறு மக்களுக்கு அளிக்கலாம் என்றும் ஆராய போவதாக கூகுள் நிறுவனம் உறுதி அளித்திருக்கிறது.

No comments:

Post a Comment