மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 16, 2020

மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும், தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மாணவ, மாணவியா், கல்வித்தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள, பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, மத்திய பல்கலைகளில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும், தமிழகத்தை சேர்ந்த, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இன மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவா் ஒருவருக்கு, ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.


 இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், சென்னை, சேப்பாக்கம் எழிலக கட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம் அல்லது அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகி, விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில், சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களைப் பரிந்துரை செய்து வரும், 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment