தஞ்சாவூர் பெரியகோயிலை உலக அதிசயங்களில் 8வது அதிசயமாக இடம்பெற செய்வதற்காக ஆதரவு திரட்டும் பணிகளை ஒருங்கிணைப்பு குழு தொடங்கியுள்ளது. தஞ்சாவூரில் 44 ஏக்கர் நிலப்பரப்பில் 216 உயரத்தில் வானுயர்ந்து நிற்கும் பெருவுடையார் கோயில், மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
ஒன்றரை லடச்ம் டன் கருங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவைகளை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள பெரிய கோயில் சோழர் கால கட்டட கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இந்த கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு கடந்த 1987ம் ஆண்டு அறிவித்தது.
கடந்த 5ம் தேதி நடைபெற்ற பெரியகோயில் குடமுழுக்கு உலகம் முழுவதும் கவனம் பெற்றது. இந்நிலையில், பெரிகோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை பெரிய கோயில் 8வது உலக அதிசயம் என்ற ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சையை சேர்ந்த பொறியாளர்கள், மருத்துவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் என அனைத்தும் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் சர்வதேச அளவில் தமிழர்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தவும் ஒருங்கிணைப்பு குழு திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment