அலுவலக உதவியாளருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 19, 2020

அலுவலக உதவியாளருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்ட கருவூலத்துறையில் காலியான ஆறு அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என, சம்பளக்கணக்கு அலுவலர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:

இப்பணிக்கு குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர்-1, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-2, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)-1, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-1, ஆதிதிராவிடர் (ஆதரவற்ற விதவை)-1 என்ற இடஒதுக்கீட்டில் தேர்வு நடக்கும். குறைந்தது 18 வயதும், அதிகபட்சமாக எஸ்.சி.எஸ்.டி.,யினருக்கு 35, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32, இதர பிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும்.பத்தாம் வகுப்புக்கு மேல் படித்த பி.சி., எம்.பி.சி.,எஸ்.சி.எஸ்.டி.,யினருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை


.தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை சம்பள கணக்கு அலுவலர், சம்பள கணக்கு அலுவலகம், தெற்கு வெளி வீதி, மதுரை-625 001 முகவரியில் மார்ச் 9 மாலை 5:45 க்குள் அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை https://madurai.nic.in இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment