பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு எத்தனை கோடி என்பதைவிட எவ்வளவு சதவீதம் என்பதே முக்கியம்: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 14, 2020

பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு எத்தனை கோடி என்பதைவிட எவ்வளவு சதவீதம் என்பதே முக்கியம்:

பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு எத்தனை கோடி என்பதைவிட எவ்வளவு சதவீதம் என்பதே முக்கியம் என்று கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதேபோல், உயர் கல்வித்துறைக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காமராஜர் காலத்தில் 34% வரை பட்ஜெட்டில் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் அப்போது கல்வி வளர்ச்சி கண்டது.

அதனால், எத்தனை கோடி என்பதைவிட எவ்வளவு சதவீதம் என்பதே முக்கியம். மொத்த பட்ஜெட்டில் கல்விக்கு 20% கீழ் ஒதுக்கீடு செய்திருந்தால் அது சரியானதாக இருக்காது" என்றார்.


மேலும், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வது போல் பலமுறை நடைமுறைப்படுத்தப்படாதது வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதனையொட்டி இந்து தமிழ் இணையதளம் சார்பில் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலிடம் கருத்து கேட்டபோது, "டெல்லியில், கல்வி வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் 26% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment