பேராசிரியர்களின் அசல் சான்றிதழ் :இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 16, 2020

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ் :இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு தடை

பேராசிரியர் பணியில்சேரும் முதுநிலை பட்டதாரிகளிடம், அசல் சான்றிதழ்களை கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது' என, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



திருத்திய விதிநாடு முழுவதும், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் அங்கீகாரம் மற்றும் பல்கலைகளின் இணைப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பாக, புதிய விதிகளை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது. அதில், கல்லுாரி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான விதிகள் திருத்தப்பட்டுள்ளன.


 அதில், ஒவ்வொரு இன்ஜினியரிங் கல்லுாரியும், பட்டப் படிப்பில், 15 மாணவர்கள்; முதுநிலை பட்டப் படிப்பில், 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற விதி, ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற திருத்திய விதியை பின்பற்ற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.


அதேபோல், இன்ஜினியரிங் கல்லுாரியில் பணியில் சேர்க்கப்படும் உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர்களிடம்அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்து, கொள்ளக்கூடாது. எச்சரிக்கைஅவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து விட்டு, உடனே ஒப்படைத்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது



.இந்த அறிவிப்புக்கு, முதுநிலை பட்டதாரிகள்மற்றும் பேராசிரியர்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஓர் ஆண்டுக்கு முன், சென்னையை சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், வசந்தவாணன் என்ற உதவி பேராசிரியர், தன் அசல் சான்றிதழ்களை கல்லுாரியில் இருந்து பெற முடியவில்லை என்று கூறி, தற்கொலை செய்ததாக, தகவல் வெளியானது.


இது குறித்து, அகில இந்திய தனியார் கல்லுாரி பணியாளர்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.அப்போது, எந்த பேராசிரியரிடமும் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்து, அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என, இன்ஜினியரிங் கல்லுாரிகளை, அண்ணா பல்கலையும் அறிவுறுத்தியது. இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.,யும் கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

No comments:

Post a Comment