அழகப்பா பல்கலையில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 16, 2020

அழகப்பா பல்கலையில் வேலை


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளை நிரப்பிடுவதற்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 50

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவிப்பேராசிரியர் - 47
பணி: துணைப் பேராசிரியர் - 21
பணி: பேராசிரியர் - 10
பணி: முதல்வர் - 1
பணி: நூலகர் - 1

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்: ஃபைன் ஆர்ட்ஸ், பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி, வரலாறு, அரசியல் மற்றும் பொது நிர்வாகம், இதழியல், பயோ டெக்னாலாஜி, தாவரவியல், மைக்ரோ பயோலாஜி என 22 துறைகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், நெட், ஸ்லெட் தேர்ச்சி அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணைப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


 மேலும், குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நூலகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நூலக அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் நூலகராக பணி அனுபவம் வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பாபுரம், காரைக்குடி 630 003.

மேற்கண்ட பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.02.2020


Click here to download

No comments:

Post a Comment