ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை

ஆசிரியர்கள் தங்களது மாணவர்களிடம்  தனிப்பட்ட முறையில் பேச ஒரு நாளில் சில மணித்துளிகளை செலவிடுங்கள்.  அப்போதுதான் அவர்களின் தனித்திறமை தெரிய வரும் என்று முதல்வர் எடப்பாடி அறிவுரை வழங்கினார்


சென்னை அருகே திருப்போரூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 1009 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். அவர் பேசியதாவது:   நான் கிராமப்புறத்தில் வளர்ந்தவன்.

 சென்னைக்கு அருகில் இதுபோன்ற ஒரு கல்லூரியில் உங்களுக்கெல்லாம் பட்டம் வழங்கும் வாய்ப்பை பெற்றதற்கு முதலில் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு உயர்கல்விக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியில் மட்டும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்திய அளவில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 34 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்ந்து இந்தியாவிலேயே தமிழகம் உயர் கல்வியில் முதலிடம் பெற்றுள்ளது.


 ஆண்டுதோறும் 100 சிறந்த பொறியியல் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உயர் கல்விக்கு மட்டும் ரூ.5,052 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளியானாலும் சரி, கல்லூரியானாலும் சரி ஆசிரியர்கள் தங்களது மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேச ஒருநாளில் சில மணித்துளிகளை செலவிடுங்கள். அப்போதுதான் அவர்களின் தனித்திறமை உங்களுக்கு தெரிய வரும்.  இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment