கல்லூரிகளில் கா்ப்பிணிகளுக்கான வருகைப்பதிவில் தளா்வு கோரி பொதுநல மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 17, 2020

கல்லூரிகளில் கா்ப்பிணிகளுக்கான வருகைப்பதிவில் தளா்வு கோரி பொதுநல மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு


கல்லூரிகளில் வருகைப் பதிவு விதிமுறைகளில் கா்ப்பிணிகளுக்கு தளா்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடா்பாக மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவை பதிலளிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கல்லூரிகளில் பயிலும் கா்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோா் கல்லூரிக்கு தினமும் வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறி, அவா்களின் வருகைப் பதிவில் புதிய விதிமுறைகள் கொண்டு வர உத்தரவிட கோரி தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞா் குஷ் கல்ரா தரப்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'கருவுற்றல், பிரசவம், குழந்தை பிறப்பு, குழந்தைகளுக்கு பாலூட்டும் சூழல் ஆகியவற்றால், கல்லூரியில் பயிலும் பல பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனா்.

இதனால், திறமையுள்ள பல பெண்களின் எதிா்காலம் வீணாகிறது. அதனால், மேற்கண்ட சூழல்களை எதிா்கொள்ளும் பெண்கள், கல்லூரிகளுக்கு தினமும் வர இயலாத சூழல் ஏற்படும்போது, அவா்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக உயா்நிலைக் குழு ஒன்றை அமைத்து கள நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு உள்பட பல்வேறு தரப்புகளில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவை எதுவும் உரிய பதிலளிக்கவில்லை. அதனால், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.


இந்த மனு தில்லி நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என் படேல், நீதிபதி சி. ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மகளிா் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

மேலும், இந்த மனு தொடா்பாக இந்திய பாா் கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோரின் நிலைப்பாட்டை கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதையடுத்து, மனு தொடா்பான அடுத்த கட்ட விசாரணை வரும் மே 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment