சாம்சங் ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த புதுவரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 17, 2020

சாம்சங் ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த புதுவரவு


கேலக்ஸி நோட் 10 பிளஸ் எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்திய சாம்சங் தற்போது 'நோட் 10 லைட்' எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.


சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், அதற்கு போட்டியாக சாம்சங் நோட் 10 லைட் களமிறங்குகிறது.

நோட் 10 லைட் 6 ஜிபி வேரியண்ட் 38,999 ரூபாய், 8 ஜிபி வேரியண்ட் 40,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 128 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் வருகின்றன.

கேலக்ஸி நோட் 10 பிளஸ் போனை ஒப்பிடுகையில், இதில் கூடுதலாக சதுர வடிவ கேமரா ஒன்று உள்ளது.

6.7 இன்ச் ஃபுல் எச்டி + அமோல்டு பிளஸ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே உள்ளது. மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் ஒரு முன் கேமரா கொண்டுள்ளது.


டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஓ.ஐ.எஸ் கொண்ட 12 எம்.பி பிரதான கேமரா உள்ளது. செல்பி கேமராவில் 32 எம்.பி சென்சார் உள்ளது.

6.7 அங்குல கேலக்ஸி நோட் 10 லைட்டை நோட்பேடாக பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் இன்-ஹவுஸ் எக்ஸினோஸ் 9810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 10nm 64-பிட் ஆக்டா-கோர் ப்ராசசர், 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

No comments:

Post a Comment