பதவி உயர்வு மூலம் ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 2, 2020

பதவி உயர்வு மூலம் ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல்

தொடக்க, நடுநிலை பள்ளியில் காலியாக உள்ள தலைமை, பட்டதாரி ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.




அவர் கூறியதாவது:தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஒரே நிலையில்10 ஆண்டு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கி, அடிப்படை சம்பளத்தில் இருந்து 6 சதவீத உயர்வும், தேர்வு நிலை முடித்து 10 ஆண்டுக்கு பின் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கி, அடிப்படை சம்பளம் 6 சதவீதம் உயர்த்தப்படும். 




இதற்கான உத்தரவை மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்குவதால், காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வட்டார கல்வி அலுவலரிடம் இப்பணியை ஒப்படைக்க வேண்டும்.தமிழகத்தில் அரசு அனுமதி பெறுவது பற்றி முறையாக தெரியாமல், 4 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் உயர்கல்வி படித்துள்ளனர். கல்வித்துறை, உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு 17 ஏ - படி விளக்கம் கேட்டு, சம்பள உயர்வையும் நிறுத்தியுள்ளனர்.




 இதை தளர்த்தி பின்னேற்பு வழங்கி, ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதிய நாளில் இருந்து சம்பள உயர்வு வழங்க வேண்டும்.தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்துள்ளது.




அதற்கு பின் ஓய்வு, இறப்பு மூலம் காலியாகும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இக்கோரிக்கையை பள்ளிகல்வி துறை ஆணையாளர் சிஜூ தாமஸிடம் வலியுறுத்திள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment