தோப்புக்கரணம் போட்டால் டிக்கெட் இலவசம்: இரயில்வே அறிமுகப்படுத்திய புதிய திட்டம்: பயணிகள் வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

தோப்புக்கரணம் போட்டால் டிக்கெட் இலவசம்: இரயில்வே அறிமுகப்படுத்திய புதிய திட்டம்: பயணிகள் வரவேற்பு

டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவசமாக நடைமேடை டிக்கட் (பிளாட்பார்ம் டிக்கெட்) வழங்கும் புதுமையான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


. உடல் ஆரோக்கியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த புதிய முயற்சியை  ஊக்குவிக்கும் வகையில், ரயில் நிலையங்களில் தோப்புக்கரணம் அதாவது உட்கார்ந்து எழுந்தால் (ஸ்குவாட்) இலவசமாக பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் இலவச டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பாக, ஒருவர் 30 முறை உட்கார்ந்து எழுந்தால் சென்சார் மூலம் அதனை உணரும் இயந்திரம், இலவச நடைமேடை டிக்கெட்டை வழங்கும். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

1 comment: