திடீரென விலையை உயர்த்திய ஏர்டெல். வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 19, 2020

திடீரென விலையை உயர்த்திய ஏர்டெல். வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன.

அந்த நஷ்டத்தை சரிக்கட்டும் நோக்கில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகையை அறிமுகம் செய்தது.


இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது சலுகையிலேயே குடும்பத்தாரை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இரண்டாவது இணைப்பாக சேர்த்து கொள்ள முடியும்.

தொடக்க கட்டணம் ரூ.149ஆக இருந்த ஏர்டெல் ஆட் ஆன் சலுகை விலை தற்போது ரூ. 249ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது.இந்த விலை உயர்வால் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்

No comments:

Post a Comment