அரசுப் பள்ளியில் கொடூரம்: நிகழ்ந்த சம்பவத்திற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க பொதுமக்கள் கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

அரசுப் பள்ளியில் கொடூரம்: நிகழ்ந்த சம்பவத்திற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க பொதுமக்கள் கோரிக்கை

செருப்பு பட்ட தகராறில் நண்பருக்கு ஆதரவாக சென்ற மாணவர் வகுப்பறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

 இது தொடர்பாக ‘கராத்தே’ மாணவரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திரா, சித்தூர் மாவட்டம், செர்லோபல்லி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. இவரது மனைவி சாந்தி.

 இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் இவர்களின் மகன் அசோக் குமார் (15) மதனபல்லி ஈஸ்வர காலனியில் உள்ள தனது  அத்தை குமாரியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். அசோக்குமார் அங்குள்ள ஜில்லா பரிஷத் அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.


நேற்று முன்தினம் மாலை பள்ளி வகுப்பறையில் அசோக் குமாரின் நண்பர் மீது, மற்றொரு மாணவரின் கால் செருப்பு பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது பற்றி அந்த மாணவர் தனது நண்பர் அசோக்குமாரிடம் தெரிவித்தார்.


இதையடுத்து, அசோக் குமார் தனது நண்பரிடம் தகராறு செய்த மாணவர் அணிந்திருந்த செருப்பை பிளேடால் அறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவன், தான் கற்றுக் கொண்ட ‘கராத்தே’ மூலம் அசோக் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் மயங்கி விழுந்த அசோக் குமாரை ஆசிரியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மதனபல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அசோக் குமாரை கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
.

ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை


மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட பள்ளியில் 2110 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 78 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.   மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின்போது, ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் இல்லாததால் இந்த விபரீதம் நடந்துள்ளது.



 ‘இது மிகவும் வேதனைக்குரியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும், மாணவனின் சாவுக்கு ஆசிரியர்களும் பொறுப்பேற்க வேண்டும்,’ என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment