திருப்பூர்:தொலைந்துவிட்டாலோ, தகவல்களில் திருத்தம் செய்தாலோ, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு நகல் பெறுவது எளிதாகியுள்ளது.தமிழகம் முழுவதும், 2.06 கோடிக்கும் அதிகமான 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. கார்டில் உள்ள தவறான தகவல்களை திருத்தினாலோ, முகவரி மாற்றம் செய்தாலோ, நகல் கார்டு பெறும் வசதி இல்லை.
இணையதளத்தில் கிடைக்கும், அத்தாட்சி மட்டுமே, ஆதாரமாக இருந்தது. இதேபோல், கார்டு தொலைந்துவிட்டாலும், நகல் பெற முடியாமல் இருந்தது.கடந்த, மூன்று ஆண்டுகளாக நிலவிய சிக்கலுக்கு, தீர்வு காணும் வகையில், மாவட்டம் தோறும் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' நகல், 'பிரின்ட்' செய்யும் மையம் துவக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிப்பது எப்படி!'இ-சேவை' மையம் சென்று, ஸ்மார்ட் கார்டில், பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட தேவையான திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டும்
.பின், tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, பொது வினியோக திட்ட பகுதிக்குள் நுழைந்து, 'நகல் ஸ்மார்ட் அட்டைக்கு விண்ணப்பிக்க' என்ற கட்டத்தை 'க்ளிக்' செய்ய வேண்டும்.ரேஷன் கடையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை பதிவு செய்து, கடவு எண்ணையும், 'கேப்சா' குறியீட்டு எண்ணையும் 'டைப்' செய்து, சமர்ப்பிக்க வேண்டும்
. சமர்ப்பிக்கப்பட்ட 'ஆன்லைன்' விண்ணப்பம், நேரடியாக, தனி தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலருக்கு சென்று விடும். அவர் ஒப்புதல் அளித்ததும், மாவட்ட 'எல்காட்' பிரிவு இணையத்துக்கு சென்று, அங்கு பிரின்ட் செய்யப்படும்.கார்டுதாரரின் மொபைல் எண்ணுக்கு இதுகுறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுவதால், தாலுகா அலுவலகம் சென்று, நகல் ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்.எம்.எஸ்., வந்ததும், தாலுகா அலுவலகம் சென்று, 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, நகல் ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொள்ளலாம்' என்றனர்

No comments:
Post a Comment