இந்தியாவில் தலைசிறந்த இளம் MLA விருது தமிழ்நாட்டில் இவ்விருதை பெரும் முதல் நபர் இவர்தான் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 22, 2020

இந்தியாவில் தலைசிறந்த இளம் MLA விருது தமிழ்நாட்டில் இவ்விருதை பெரும் முதல் நபர் இவர்தான்

இந்தியாவில் தலைசிறந்த இளம் எம்.எல்.ஏ விருதை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பெற்றுள்ளார்.

புனேவை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இந்தியாவின் முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி வருகிறது.




அதன்படி, இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சட்டமன்ற தரவுகளின் அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியை இந்தியாவின் இளம் எம்.எல்.ஏ விருதுக்கு தேர்வு செய்தது.




அதன்படி,  தலைநகர் டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐவரிகோஸ்ட் நாட்டிலிருந்து வந்த ஐக்கிய நாட்டு சபையின் மக்கள் தொகை நிதியக்கத்தின் பூடான் இயக்குனர் அர்ஜென்டினா மடாவல் மற்றும் ஜெயின் மத அறிஞர் ஆச்சார்யா டாக்டர் லோகேஷ் ஆகியோர் இணைந்து இவ்விருதை அவருக்கு வழங்கினர். தமிழ்நாட்டில் இவ்விருதை பெரும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment