டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 9,882ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி ஊழியர், பிற துறைகளை சேர்ந்தவர்கள், இடைத்தரகர்கள், முறைகேடாக தேர்வில் வெற்றிபெற்றவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு பதிலாகப் புதிய தேர்ச்சிப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,398 பணியிடங்களாக இருந்தது.
தற்போது, மேலும், 484 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு தற்போது 9,882ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 9,882 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள தேதிகள் பின்னர் விரைவில் வெளியிடப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், காலிப்பணியிடங்ககளின் எண்ணிக்கை அதிகமாவதும், குறைவதும், வழக்கமான ஒன்றுதான் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment