1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 18, 2020

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்


கரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.


சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.

 பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தொடர்ந்து, கரோனா தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும்



அவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

முன்னதாக, தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 23 முதல் 28 வரை தேர்வு நடத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment