'இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கான புதிய தேதி, ஏப்., 10க்கு பின் அறிவிக்கப்படும்' என, தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
. பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் சேர, எந்த நுழைவு தேர்வும் கிடையாது. ஆனால், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்ற உயர் தொழில்நுட்ப கல்லுாரிகளில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான, ஜே.இ.இ., தேர்வு, ஜனவரியில் நடந்து முடிந்து, முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இரண்டாம் கட்ட தேர்வு, ஏப்., 5 முதல், நான்கு நாட்கள் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், 'கொரோனா வைரஸ்' பிரச்னையால், ஏப்ரல், 14 வரை, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
. இதன் காரணமாக, ஏப்ரலில் நடக்கவிருந்த, ஜே.இ.இ., தேர்வு, கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஜே.இ.இ., தேர்வு நடத்தப்படும் புதிய தேதி, ஏப்ரல், 10க்கு பின் அறிவிக்கப்படும் என, தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு, ஏப்., 14ல் முடிந்த பின், மே முதல் வாரத்தில், ஜே.இ.இ., தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment