அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 10க்குள் இணையதளம் துவங்க வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 10, 2020

அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 10க்குள் இணையதளம் துவங்க வேண்டும்

 'அனைத்து கல்வியியல் கல்லுாரிகளும், ஏப்ரல், 10க்குள் இணையதளம் துவக்க வேண்டும்' என, கல்வியியல் பல்கலை, 'கெடு' விதித்துள்ளது.



மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும், பல்கலை மானிய குழு, பல்வேறு விதிமுறைகளை கல்லுாரிகளுக்கு வழங்கியுள்ளது. அனைத்து, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளும், இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும். 


அதேபோல, மற்றொரு அமைப்பான, தேசிய கல்வியியல் ஆசிரியர் கவுன்சில் சார்பில், கல்வியியல் கல்லுாரிகளுக்கு தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகளின்படி, ஒவ்வொரு கல்லுாரியும், தனியாக இணையதளம் துவங்கி, அதில், தங்கள் கல்லுாரியின் உள் கட்டமைப்பு வசதிகள், நிர்வாக குழு, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விபரம், மாணவர்களுக்கான அறிவிப்புகள் போன்றவற்றை வெளியிட வேண்டும்.



 ஆனால், பெரும்பாலான கல்லுாரிகள் இணையதளம் துவக்குவதில், அலட்சியமாக உள்ளன. இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் வந்ததால், அனைத்து கல்லுாரிகளுக்கும், பல்கலை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது




. அதில், 'அனைத்து கல்வியியல் கல்லுாரிகளும், தனியாக இணையதளம் துவக்கி, ஏப்.,10க்குள், அதன் அறிக்கையை பல்கலைக்கு அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment