கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்தாலும், 12 நாடுகளில் மட்டும் இதுவரை ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை.
ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த 7 நாடுகளிலும், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 நாடுகளிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா லியோ, சவுவ் டோமே அன்ட் பிரின்சிபி (South Sudan, Comoros, Malawi, Botswana,
Burundi, Sierra Leone, and Sao Tome and Principe) ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும், ஆசியாவில் வடகொரியா, மியான்மர், தஷ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், யேமன் ஆகிய நாடுகளும் கொரோனா பிடியிலிருந்து தப்பியுள்ளன.
இதேபோல பசிபிக் பெருங்கடலில் உள்ள குட்டி தீவுகள் சிலவற்றிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.
அதேநேரத்தில் ஐரோப்பியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.இதில் வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
No comments:
Post a Comment