ஏப்ரல் 14 வரை HD மற்றும் அல்ட்ரா HD தரத்தில் வீடியோ கிடையாது..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 26, 2020

ஏப்ரல் 14 வரை HD மற்றும் அல்ட்ரா HD தரத்தில் வீடியோ கிடையாது..!

வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வரையில் டிஜிட்டல் தளங்களில் வீடியோக்கள் SD தரத்தில் மட்டுமே வழங்கப்படும் என ஒட்டுமொத்த டிஜிட்டல் துறையும் இணைந்து ஒருமித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொழுபோக்குக்காக டிஜிட்டல் தளங்களேயே நம்பி உள்ளனர். இணையப் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசு மற்றும் டெலிகாம் துறை இணைந்த ஒரு முடிவு எடுத்துள்ளது.

நாட்டில் உள்ள அத்தனை இணையப் பயனாளருக்கும் எவ்வித தொய்வும் இன்றி இணைய சேவை கிடைக்க வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வரையில் HD மற்றும் அல்ட்ரா HD தரத்திலான வீடியோக்கள் வழங்கப்பட மாட்டாது.மாறாக SD தரத்திலான வீடியோக்கள் மட்டுமே பயனாளர்களுக்கு வழங்கப்படும்.

இம்முடிவை சோனி, கூகுள், ஃபேஸ்புக், வியாகாம் 18, அமேசான் ப்ரைம் வீடியோ, ஜீ, டிக்டாக், நெட்ஃப்ளிக்ஸ், எம் எக்ஸ் ப்ளேயர், ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் ஒருமித்து எடுத்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ காம்ஃபரன்ஸ் மூலம் அனைத்து நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment