ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பதற்கான திட்டம் தற்பபோது இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சத்தை விதைத்திருத்திக்கிறது. இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவிற்காக தன்னை மன்னித்து விடும்படியும் இதனை தவிர வேறு வழியில்லை எனவும் கூறியிருந்தார்
. இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பதற்கான திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜூவ் கெளபா, ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை
. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று வெளியாகும் தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது என்றார். இதன் மூலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற வதந்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
நல்லது
ReplyDelete