ஜூலை 1 ல் புதிய ரயில் கால அட்டவணை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 11, 2020

ஜூலை 1 ல் புதிய ரயில் கால அட்டவணை

ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட உள்ள ரயில்வே அட்டையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ரயில் காலஅட்டவணையை தயாரிக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த ஆண்டுக்கான ரயில்வே அட்டவணை ஜூலை 1ம் ேததி வெளியிடப்படும். அந்த வகையில், குமரி மாவட்டத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்ல போதிய ரயில் வசதி கிடைக்கும் வகையில், ரயில் கால அட்டவணையில் திருத்தம் வருமா?  என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரியிலிருந்து. மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை.


இந்த தடத்தில் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களூர் இரவு நேர ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று  குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கை ஆகும்.


 கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு திருவனந்தபுரம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து அதிகபடியான கிறிஸ்தவ மற்றும் பிற மதத்தினரும்  வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க செல்கின்றனர்.


 பக்தர்களின் வசதிக்காக கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் வேண்டும்.

 கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் சூப்பர் பாஸ்டு ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும். நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மூன்று முறை இயங்கும் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம்  செய்ய வேண்டும். ( கடந்த ஆண்டு வாரம் 5-நாட்களாக மாற்றம் செய்ய  ரயில்வே  வாரியம் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால்  தெற்கு ரயில்வே இந்த ரயிலை  இயக்காமல் உள்ளனர்)


 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை சுற்றுலா பயணிகள் வசதிக்காக சூரிய மறைவு  முடிந்த பிறகு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறும், சூர்ய உதயத்துக்கு  முன் அதிகாலை சுமார் 4.30 முதல் 5 மணிக்குள் கன்னியாகுமரி வந்து சேருமாறு  காலஅட்டவணை மாற்றம் செய்து இயக்க வேண்டும்.



 கன்னியாகுமரியிலிருந்து  மதுரை சென்னை வழியாக வாரணாசிக்கு வாராந்திர ரயில் இயக்க ரயில்வே வாரியம்  அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் தெற்கு ரயில்வே இந்த ரயிலை  இயக்காமல் உள்ளனர். இந்த ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

திருவனந்தபுரம் - மங்களுர் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.


 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். நாகர்கோவில் - மங்களுர் ரயில்களின்  வேகத்தை அதிகபடுத்தி காலஅட்டவணையை  மாற்றம் செய்து இயக்க வேண்டும்.  கன்னியாகுமரி - திப்ருகர் ரயிலை மதுரை, சென்னை வழியாக இயக்க  வேண்டும். தமிழகத்திலிருந்து இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு போதிய ரயில்வசதி இல்லை.


 கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா, நாக்பூர், போபால் வழியாக டெல்லிக்கு, வராத்துக்கு இரண்டு நாள் செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரசை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி போன்ற பகுதிகளை ரயில் மார்க்கமாக நேரடியாக இணைக்கும், வாராந்திர ரயிலான கன்னியாகுமரி  புதுச்சேரி ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.



நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு தற்போது இயங்கிவரும் வாரம் மூன்று முறை ரயிலை தினசரி செல்லதக்க வகையில் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் வரை செல்லும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாகவும் மாற்றம் செய்து இயக்க வேண்டும்.

சென்னையிலிருந்து ஐதாராபாத்துக்கு இயக்கப்படும் மூன்று தினசரி ரயில்களில் ஒரு ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.


இதை நிறைவேற்றும் வகையில், ரயில் கால அட்டவணையில் திருத்தம் வேண்டும் என்பது குமரி மாவட்ட ரயில் பயணிகளின் கோரிக்கை ஆகும்.

No comments:

Post a Comment