அத்தியாவசிய பொருட்கள் ரூ 2,000க்கு மேல் கிடையாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 30, 2020

அத்தியாவசிய பொருட்கள் ரூ 2,000க்கு மேல் கிடையாது

அனைத்து மக்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க, 'ஒரு நபருக்கு, அதிகபட்சமாக, 2,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வழங்கப்படாது' என, திருவல்லிக்கேணி வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் உட்பட, நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஏப்., 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், மளிகை கடைகள், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு, தடை விதிக்கப்படவில்லை.

இந்த சூழலில், வசதி படைத்தவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர், மளிகை கடைகளில், இரண்டு மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி, வீடுகளில் இருப்பு வைத்து வருகின்றனர்.

இதனால், ஏழைகளுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள்கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.எனவே, ஒருவருக்கு, 2,000 ரூபாய்க்கு மேல், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில்லை என, சென்னை, திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதை, அனைத்து வியாபாரிகளும் பின்பற்றினால், தமிழகத்தில், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

இது குறித்து, திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர், வி.பி.மணி கூறியதாவது:


ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து சேவை முடங்கியுள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரத்து பாதித்துள்ளது.

தற்போது, மளிகை கடைகளில், குறைந்த அளவு பொருட்களே இருப்பு உள்ளன.ஆனால், வசதி படைத்த வர்கள், ஊரடங்கு காரணமாக, இரு மாதங்களுக்கு தேவையான மளிகை, வீட்டு உபயோக பொருட்களை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

இதனால், சிறு கடைகளுக்கு கூட, பொருட்கள் கிடைக்க முடியவில்லை.எனவே, ஏழைகள் உட்பட அனைவருக்கும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில், ஒரு நபருக்கு, அதிகபட்சம், 2,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.


இதனால், அனைத்த தரப்பினருக்கும், இரு வாரங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். மேலும், உடனுக்குடன் பொருட்கள் வழங்கி, மக்களை விரைவாக அனுப்ப முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment