மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிட்ட 20 அறிவிப்புகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 26, 2020

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிட்ட 20 அறிவிப்புகள்


ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

.நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்.

*கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.


*இந்தியாவில் எவரும் பசியில் இருக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.

*மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு முதலில் உதவிக் கரம் நீட்ட மத்திய அரசு முன்வந்துள்ளது.

*கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.

*கொரோனாவுக்கு எதிராக போரிடும் மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு காப்பீடு செய்யப்படும்.

*80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த 3 மாதத்திற்கு தலா 1 கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும்

*விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், விதவைகளுக்கு நேரடியாக பண உதவி செய்யப்படும்..

*விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படுகிறது.

*சுமார் 8.7 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.


*ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஐந்து கோடி பேருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

*மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

*வங்கிகளில் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும்  20 கோடி பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும்.விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.

*உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற பெண்களுக்கு தலா 3 சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

*உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற சுமார் 8 கோடி குடும்பம் 3 சிலிண்டர்களை இலவசமாக பெறுவர்.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

*பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

*தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தலா 12 சதவீத இபிஎஃப் தொகையை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்கு செலுத்தும்.


*100 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் சார்பில் தலா 12% இபிஎஃப் தொகையை மத்திய அரசு 3 மாதங்களுக்கு செலுத்தும்.

*தொழிலாளர்கள் பிஎஃப் பணத்தில் 75 சதவீதம் அல்லது 3 மாத ஊதியம், இவற்றில் எது குறைவோ அதை பெற்றுக் கொள்ளலாம்.

*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்.

*100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு

No comments:

Post a Comment