21 நாள் ஊரடங்கு குறித்து மத்திய அரசு விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 28, 2020

21 நாள் ஊரடங்கு குறித்து மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் பிறப்பிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு 'வருமுன் காக்கும் நோக்கத்தில் எச்சரிக்கை உணர்வுடன் முன்கூட்டியே எடுக்கப்பட்ட பாதுகாப்பு முடிவாகும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திட்டமிடல் ஏதுமின்றி 21 நாட்கள் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா பரவலை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் ஜன., 30ல்
அறிவித்தது. அதற்கு முன்னரே இந்திய எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை துவங்கி விட்டது.இந்தியாவின் முதல் கொரோனா தொற்று கடந்த ஜனவரி 30ல் உறுதி செய்யபட்டது.




ஆனால் ஜன. 18ல் இருந்தே அனைத்து விமான நிலையங்களிலும் சீனா மற்றும்
ஹாங்காங்கில் இருந்து வரும் பயணியருக்கு காய்ச்சலை கண்டறியும் 'தெர்மல் ஸ்கிரீனிங்' பரிசோதனை துவங்கிவிட்டது. இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு 25 முதல் 39 நாட்களுக்கு பின்னரே விமான நிலையங்களில் பயணியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தியா மிகவும் முன்னெச்சரிக்கையுடன் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது






அமெரிக்கர்கள் பாராட்டு
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியா - அமெரிக்கா வர்த்தக கூட்டு சங்கத்தின் தலைவர் முகேஷ் அகி கூறியதாவது: 'இந்தியாவில் மூன்று வாரம் ஊரடங்கு பிறப்பித்தது மிக சரியான முடிவு' என அமெரிக்கர்கள் மத்தியில் பேச்சு உள்ளது. ஒரு ஆளுமை மிக்க தலைவரால் மட்டுமே
இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியும் என்பது அமெரிக்க மக்களின் கருத்தாக இருக்கிறது. இதன் மூலம் தங்கள் கொள்கை முடிவுகளில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைப்பிடிப்பது மிகத் தெளிவாகி உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment