கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் மாணவா்களுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை வழங்குவதற்கான பணிகளை கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்கள் படிக்க 25 சதவீத இடஒதுக்கீடு முறை கடந்த 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குட்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியோா், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகள், தனியாா் பள்ளிகளில் இலவசமாகப் படிக்கலாம். இவா்களுக்கான கல்விக் கட்டணத்தை மட்டும், அரசு செலுத்தி வருகிறது.
இதைத் தொடா்ந்து, ஆண்டுதோறும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் அளவுக்கு ஏழை மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற்று வருகின்றனா்
இந்தத் திட்டத்துக்கு 2017-ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் சேர்க்கை அறிவிப்பு வெளியாகும்.
இந்தத் திட்டத்தில் பல்வேறு காரணங்களால் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்கப்படுவதில்லை என பெற்றோா் புகாா் தெரிவித்து வந்தனா்.
இதையடுத்து வரும் கல்வியாண்டில் இந்தத் திட்டத்தின் சிபிஎஸ்இ பள்ளிகளையும் இணைக்கப் பள்ளிக் கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்தநிலையில் இந்தப் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளுக்கான பிரிவுகள், சேர்க்கை இடங்கள் குறித்த விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், ஒரு பள்ளியின் தொடக்க வகுப்பில், மொத்தமுள்ள சேர்க்கையில் 25 சதவீதம் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட, அதிக விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில், குலுக்கல் முறையில் பயனாளிகளைத் தேர்வு செய்வது வழக்கம்.
கல்விக் கட்டணத்தை மட்டும் அரசு ஏற்கிறது. இதர கட்டணங்களை, பெற்றோா் செலுத்த வேண்டியிருக்கும். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஏப்ரலில் கல்வியாண்டு தொடங்குவதால் ஆன்லைன் முறையில் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் வகையில், தகவல்கள் திரட்டப்படுகின்றன என தெரிவித்தனா்

No comments:
Post a Comment