3 மாசம் EMI கட்ட தேவையில்லை - ரிசர்வ் வங்கி அதிரடி !! முழு விபரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 27, 2020

3 மாசம் EMI கட்ட தேவையில்லை - ரிசர்வ் வங்கி அதிரடி !! முழு விபரம்

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 இதனால், வீடு, தொழில்துறையினருக்கான கடனுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 வங்கிகளில் கடன் வாங்கியோர், தவணை தொகையை 3 மாதங்களுக்கு செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது


. டில்லியில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை தீவிரமாக கவனித்து வருகிறாம். சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 ஜிடிபி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி ஊழியர் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

.பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும். வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.9 லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டது. இதனால், வீடு, வாகன கடனுக்கான வட்டியும், இ.எம்.ஐ., செலுத்தும் மாதங்களும் குறையும் வாய்ப்பு உள்ளது.

தொழில்துறையினரின் கடனுக்கான வட்டியும் குறையக்கூடும். வங்கிக்கடனை ஊக்கப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.


தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.


வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், மாத தவணை வசூல் செய்வதை 3 மாதங்கள் வங்கிகள் ஒத்திவைக்கலாம்.

இந்த 3 மாதம் அவகாச காலத்தை கடன் பெற்றவர்களின் 'சிபில் ஸ்கோரில்' சேர்க்க கூடாது. தனியார் நிறுவனங்களுக்கான வங்கி கடனுக்கான மாத தவணை 3 மாதம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment