தன்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்:பிரபல தொழிலதிபர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 27, 2020

தன்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்:பிரபல தொழிலதிபர்

மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது 30 சொகுசு பங்காளக்களை அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.


 இந்தியாவில் 16 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸால் 650 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் மருத்துவமனைகளில் தஞ்சமடைவோரின் எண்ணிக்கை அதிகமானால் இடம் போதாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரபல திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

அதன்படி,நடிகர் கமலஹாசன், கொரோனாவால்  பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தனது வீட்டையே எடுத்துக்கொள்ளுமாறு அரசிடம் வலியுறுத்தினார்



மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா என்பவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முன்னணி தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார்.

இந்தநிலையில்  தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்புள்ளவர்களை தனிமைபடுத்த உள்ளிட்டவற்றுக்கு இந்த பங்களாக்களை பயன்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார். அங்கு தூய்மைப் பணி மற்றும் உணவு வசதியையும் செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இதை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment