மே 3-ம் தேதி நடைபெற இருந்த நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு...! மறு தேதி பின்னர் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 27, 2020

மே 3-ம் தேதி நடைபெற இருந்த நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு...! மறு தேதி பின்னர் வெளியீடு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  கொரோனா காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 4 நாட்கள் ஆகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தற்போது நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ, பல் மற்றும் ஆயுஷ் திட்டங்களில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. முன்னதாக, எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர அனைத்து மாநில மற்றும் மத்திய மருத்துவ மற்றும் பல் நிறுவனங்களுக்கும் தேர்வு நடைபெற்றது.

இருப்பினும், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மருக்கான தனி நுழைவுத் தேர்வுகள் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் அனைத்து சேர்க்கைகளும் நீட் யுஜி தரவரிசைகளின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும்.


மே 3-ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழகத்தில் வரும் மே 3-ம் தேதி நடக்க இருந்தது, கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, ஜனவரி 1-ம் தேதி வரை நடந்தது.

வருடம் வருடம் இந்த தேர்வை மக்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனாலும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment