கரோனா எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவாகி உலக நாடுகளில் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தொடர்ந்து, கரோனா தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், '2018-19, 2019-20ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு மார்ச் 20 முதல் மார்ச் 31 வரையும், சுருக்கெழுத்தர் பதவிக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரையும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், கரோனா வைரஸை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளதாலும், காரோனாவைத் தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாலும் குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment