உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணிக்காக்க 5 வழிமுறைகளை வெளியிட்ட WHO - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 28, 2020

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணிக்காக்க 5 வழிமுறைகளை வெளியிட்ட WHO

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் முடங்கி உள்ள நிலையில், இந்த நெருக்கடி காலத்தில் ஆரோக்கியத்தை கடைபிடிப்பதற்கான 5 வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் பகிர்ந்துள்ளார்.


மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சத்துமிக்க உணவுமுறையை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள டெட்ரோஸ், மதுவை தவிர்த்து, சர்க்கரை அதிகம் உள்ளவற்றை குடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் புகைப்பிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மேலும் பல நோய்களை உருவாக வாய்ப்புள்ளதாக விளக்கியுள்ளார்.

 நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதை உலக சுகாதார மையம் பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ள டெட்ரோஸ், மன ஆரோக்கியத்தை பாதுகாக்க, நம்பகத்தன்மை உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment