ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 17, 2020

ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்வு

♦️♦️சென்னை செண்டரல் , எழும்பூர்,தாம்பரம் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


♦️♦️ நாடுமுழுதும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக தெற்கு ரயில்வேயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

♦️♦️இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடைகளை பயன்படுத்துவற்கான கட்டணத்தை 5 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.


♦️♦️தற்போது ரயில்நிலையங்களில் நடைமேடை கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதாவது ரூ.50 வரையில் வசூலிப்பது என முடிவு செய்துள்ளது.

♦️♦️மேலும் இந்த கட்டண உயர்வு வரும் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment