ரூ .57ஆயிரம் சம்பளத்தில் எல்ஐசி-யில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 13, 2020

ரூ .57ஆயிரம் சம்பளத்தில் எல்ஐசி-யில் வேலை


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) காலியாக உள்ள உதவி பொறியாளர், உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 218

பணி: Assistant Engineer (AE)
காலியிடங்கள்: 50
1. Civil) 29
2. Electrical - 10
3. Architect - 04
4. Structural - 04
5. Electrical, Mechanical - MEP Engineers - 03

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், பி.ஆர்க், எம்இ, எம்.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணி: Assistant Administrative Officers (AAO)
காலியிடங்கள்: 168
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.57,000
வயதுவரம்பு: 01.02.2020 தேதியி ன்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.85 கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: https://www.licindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Recruitment-Notification-English-(2).pdf எனும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2020

No comments:

Post a Comment